GOAT Trailer : கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி... ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு... இப்படி பண்றீங்களேம்மா!

The GOAT Movie Trailer Release Date : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வரை ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

Aug 14, 2024 - 21:53
Aug 15, 2024 - 16:31
 0
GOAT Trailer : கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி... ரசிகர்களை ஏமாற்றிய படக்குழு... இப்படி பண்றீங்களேம்மா!
The GOAT Movie Trailer Release Date

The GOAT Movie Trailer Release Date : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதேபோல், இப்படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் த்ரிஷா நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.     

இந்நிலையில், கோட் படத்தின் ரிலீஸ் தேதியை(Goat Movie Trailer Release Date) இன்று அறிவிப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது வரையும் கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முன்னதாக கோட் படத்தில் இருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் அர்ச்சனா கல்பாத்தி. அதில், இன்று கண்டிப்பாக கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். அதனை சிறப்பாக கொடுக்க வேண்டும் என நாங்கள் அனைவரும் வேலை பார்த்து வருகிறோம். அதற்கு முன்பாக இந்த போஸ்டரை உங்களுக்கு ட்ரீட்டாக வெளியிடுகிறோம் எனக் கூறியிருந்தார். ஆனாலும் 6 மணிக்கு வெளியாக வேண்டிய அப்டேட், இரவு 9 மணியை கடந்தும் இன்னும் வரவில்லை.    

இதனிடையே அர்ச்சனா கல்பாத்தி ஷேர் செய்த போஸ்டரில், விஜய் இரண்டு கெட்டப்புகளில் மிரட்ட, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதுவரை விஜய்யின் போஸ்டரும், விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இருக்கும் போஸ்டர்களும் மட்டுமே வெளியாகின. முதன்முறையாக கோட் படத்தில் நடிக்கும் அனைவரையும் ஒரே போஸ்டரில் இருக்கும்படி வெளியிட்டுள்ளது. முக்கியமாக இந்த புதிய போஸ்டரில் மைக் மோகனின் லுக் ரொம்பவே வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  

மேலும் படிக்க - விஜய்யின் கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி!

சொன்னபடி கோட் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி(The Goat Movie Trailer Release Date Update) அப்டேட் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இத்தனை நாட்களாக இதற்காக தான் காத்திருந்தோம். ஆனால், ரிலீஸ் தேதியை கூட சரியான நேரத்தில் அறிவிக்காமல் இப்படி ஏமாற்றலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ட்ரெய்லர் எடிட்டிங் வேலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் தான், ரிலீஸ் தேதி அறிவிப்பதில் படக்குழு தடுமாறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே கோட் படம் குறித்து அஜித் பேசியதை வெங்கட் பிரபு ஷேர் செய்திருந்தார். அதில் மங்காத்தாவை விட கோட் 100 மடங்கு இருக்க வேண்டும் என அஜித் கூறியது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதேபோல், விஜய்யும் கோட் படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை ரொம்பவே பாராட்டியுள்ளாராம். அதுமட்டும் இல்லாமல் தனது நெருங்கிய நண்பர்களிடம் கோட் படம் குறித்து பெருமையாக பேசி வருவதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். இதனால் விஜய் ரசிகர்களுக்கு கோட் பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow