சென்னை: விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது தான் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், கோட் ஒன்லைன் ஸ்டோரி குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவே வெளிப்படையாக பேசியுள்ளார். அதன் மூலம் கோட் படத்தில் விஜய்யின் தரமான ஆக்ஷன் ட்ரீட் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றது. கோட் படத்தை நிஜத்திற்கு நெருக்கமாக பண்ண முயற்சி செய்துள்ளதாகவும், இது SATS – எனப்படும் Special Anti Terrorist Squad என்ற அமைப்பை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, ரா அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் SATS குரூப் செய்த சம்பவம் ஒன்று, மீண்டும் அவர்களுக்கு பிரச்சினையாக வந்து நிற்கிறது. அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கோட் கதை என வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்த லீடை வைத்து கோட் படத்தின் முழு கதையையும் கண்டுபிடித்துவிட்டனர் நெட்டிசன்கள். அதாவது அப்பா விஜய், தனது குழுவினர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோருடன் இணைந்து ஒரு தீவிரவாத கும்பலை தேடுகிறது. தமிழ்நாட்டில் குண்டு வெடிப்புகள் நடத்தி வரும் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருப்பது மகன் விஜய் தானாம்.
2006ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரத்தில் தனது மகன் இறந்துவிட்டதாக நினைக்கிறார் அப்பா விஜய். ஆனால், மகன் உயிரோடு இருப்பதும் அவர் தான் பயங்கரவாத செயல்களுக்கு காரணம் எனவும் தெரியவருவது தான் கோட் படத்தில் செம ட்விஸ்ட்டாக இருக்குமாம். இதுதான் படத்தின் இடைவேளை காட்சி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் இந்த உண்மை மகன் விஜய்க்கும் தெரியவர, இருவரும் சேர்ந்து க்ளைமேக்ஸில் தரமான ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளார்களாம். அதாவது வில்லன் டீம் பயங்கரமான குண்டு வெடிப்புக்கு பிளான் போட, அதனை அப்பா விஜய்யும், மகன் விஜய்யும் எப்படி தடுக்கிறார்கள் என்பதே கோட் படத்தின் கதை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க - விஜய்யின் கோட் படத்துக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!
கமல் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ஒரு கைதியின் டைரி முதல், பல சர்வதேச படங்களில் இருந்து பட்டி டிங்கரிங் செய்யப்பட்டது தான் கோட் என சொல்லப்படுகிறது. இதில் அப்பா விஜய் டீமில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும், மகன் விஜய் டீமில் மோகன், ஜெயராம் ஆகியோரும் நடித்துள்ளதாக தெரிகிறது. கதை எப்படி இருந்தாலும் மேக்கிங்கில் வெங்கட் பிரபு தரமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கோட் படத்தின் பாடல்கள் குறித்தும் வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார். கோட் பாடல்களில் சிலருக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால் படத்துடன் பார்க்கும் போது எல்லா பாடல்களும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
மேலும், கோட் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தியேட்டரில் எழுந்து டான்ஸ் ஆடுவது கன்ஃபார்ம் எனவும், ஸ்பார்க் பாட்டுக்கு ஆரம்பத்தில் அதிருப்தி இருந்தது, ஆனால் தற்போது எல்லோரும் அதனை நல்லா இருக்குன்னு பாராட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். முன்னதாக கோட் திரைப்படம் மங்காத்தாவை விட நூறு மடங்கு சிறப்பாக இருக்க வேண்டும் என அஜித் கூறியதை வெங்கட் பிரபு குறிப்பிட்டிருந்தார். அதேபோல் விஜய்யும் இப்படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை ரொம்பவே பாராட்டியுள்ளாராம். விஜய் தனது படம் குறித்து இதுவரை யாரிடம் பேசாத அளவிற்கு, கோட் பற்றி பேசியிருப்பதே மிகப் பெரிய வெற்றி என வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.