The Goat vs Mankatha : ”மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும்..” விஜய்யின் கோட் படத்துக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!
The Goat vs Mankatha - Ajith Kumar on Venkat Prabhu's Goat Movie : விஜய்யின் கோட் படத்துக்கு அஜித் கொடுத்த அட்வைஸ் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ஷேர் செய்துள்ளார். அவரது பேட்டி விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
The Goat vs Mankatha - Ajith Kumar on Venkat Prabhu's Goat Movie : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கோட் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கவுள்ள நிலையில், வெங்கட் பிரபு கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது விஜய்யின் கோட் படத்துக்காக அஜித் கொடுத்த அட்வைஸ் குறித்து வெங்கட் பிரபு வெளிப்படையாக பேசியுள்ளார்.
அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருந்தார். வழக்கம் போல தனது டீமை வைத்தே மங்காத்தா படத்தை இயக்க முடிவு செய்திருந்தார் வெங்கட் பிரபு. ஆனால், அந்நேரம் அவரை எதார்த்தமாக சந்தித்த அஜித், மங்காத்தா கதையை கேட்டு அவரே கால்ஷீட் கொடுத்துள்ளார். அப்படித்தான் மங்காத்தா படத்தில் அஜித் என்ட்ரியாக, பின்னர் அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரும் கமிட்டாகியுள்ளனர். இறுதியாக இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மரண மாஸ் ஹிட் அடித்தது.
மங்காத்தா படத்தை பார்த்த விஜய், “என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் அர்ஜுன் கேரக்டரில் நானே நடித்திருப்பேன்” எனக் கூறி வெங்கட் பிரவுக்கே சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இப்படியாக விஜய் – அஜித் நட்பு வட்டத்தில் வெங்கட் பிரபுவும் ஐக்கியமாகியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் மங்காத்தா ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போதே, “விஜய்யுடன் எப்போது படம் பண்ணப் போற..?” என வெங்கட் பிரபுவிடம் கேட்டுள்ளார் அஜித். இதனால் கோட் படத்தில் விஜய்யுடன் கமிட்டானதும், அதனை அஜித்திடம் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.
மேலும் படிக்க - சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ
உடனே மகிழ்ச்சியான அஜித், “இத நான் எத்தன வருசமா சொல்லிட்டு இருக்கேன்... மங்காத்தா மாதிரி நூறு மடங்கு தரமான படமா கோட் இருக்கணும்” எனவும் வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார். இதனை தற்போதைய நிகழ்ச்சி ஒன்றில் ஷேர் செய்துள்ள வெங்கட் பிரபு, அஜித் சாருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்தால், அவரிடம் இருந்து இப்படியொரு வார்த்தை வரும் எனவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதேபோல், சமீபத்தில் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவரை பார்க்கப் போவதாக விஜய்யிடம் கூறியுள்ளார் வெங்கட் பிரபு. அப்போது, அஜித்தை பார்த்த பின்னர் அவரிடம் கால் செய்து கொடுக்க வேண்டும் என வெங்கட் பிரபுவுக்கு அன்பாக ஆர்டர் போட்டுள்ளார் விஜய்.
அதன்படி, வெங்கட் பிரபுவும் விஜய்க்கு போன் போட்டுக் கொடுக்க, அவரும் அஜித்தும் சில நிமிடங்கள் வரை ஜாலியாக அரட்டை அடித்துள்ளனர். இதனையும் வெங்கட் பிரபு ஷேர் செய்ய, இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர். அதேபோல், அஜித் சார் சொன்னது போல கோட் படத்தை இயக்கியுள்ளேன், இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் தான் எத்தனை மடங்கு என சொல்ல வேண்டும் எனவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். என்னதான் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும், விஜய்யும் அஜித்தும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகின்றனர். அஜித்தின் தந்தை மறைவு செய்தியறிந்து முதல் ஆளாக அவரது வீட்டுக்குச் சென்றது விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?