Amaran Making Video : சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ... திடீரென ரிலீஸாக என்ன காரணம்..?

Actor Sivakarthikeyan Movie Amaran Making Video : சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Aug 14, 2024 - 15:20
Aug 15, 2024 - 09:55
 0
Amaran Making Video : சிவகார்த்திகேயனின் அமரன் மேக்கிங் வீடியோ... திடீரென ரிலீஸாக என்ன காரணம்..?
Actor Sivakarthikeyan Movie Amaran Making Video

Actor Sivakarthikeyan Movie Amaran Making Video : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூல் செய்யவில்லை. இதனால், தற்போது நடித்து வரும் அமரன் படத்தை அதிகம் நம்பியுள்ளார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் மூவியாக உருவாகியுள்ளது அமரன். இந்தப் படத்தில் தான் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஆர்மி ஆபிஸராக நடித்துள்ளார். அதற்காக தனது கெட்டப்பை முழுமையாக மாற்றிய சிவகார்த்திகேயன், ஆக்ஷன் காட்சிகளிலும் வேற லெவலில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். அதேபோல், அமரன் மிலிட்டரி ஜானர் மூவியாக உருவாகியுள்ளதால், படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது மேக்கிங் வீடியோவை(Amaran Making Video) படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமார் 2 நிமிடங்கள் வரை ரன்னிங் டைம் உள்ள இந்த மேக்கிங் வீடியோ(Making Video), “போர் செல்லும் வீரன்... ஒரு தாய் மகன் தான்... நம்மில் யார் இறந்தாலும்... ஒரு தாய் அழுவாள்...” என்ற கேப்ஷனுடன் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ள இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதேநேரம் அமரன் மேக்கிங் வீடியோ திடீரென வெளியாக என்ன காரணம் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. அதாவது நாளை சுதந்திர தினம் என்பதால் அதனை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ(Amaran Movie Making Video) வெளியானதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க - பிக் பாஸ் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி

அதேநேரம் நேற்று சூரியின் கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்துள்ளார். கொட்டுக்காளி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தனஷை மறைமுகமாக அட்டாக் செய்தி்ருந்தார். நான் யாருக்கும் வாழ்க்கை கொடுக்கவில்லை, யாரையும் அறிமுகப்படுத்தினேன் என சொல்ல மாட்டேன். எல்லாரும் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகீட்டாங்க என்பதாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் இப்படி குறிவைத்து பேசியது தனுஷை தான் என சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து தனுஷ் – சிவகார்த்திகேயன் என இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். எனவே இதுதான் சரியான நேரம், இப்போது அமரன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டால், படத்துக்கும் பப்ளிசிட்டி கிடைக்கும் என படக்குழு நினைத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால், இது சுதந்திர தின ஸ்பெஷலாக தான் வெளியாகியுள்ளது என சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow