மதிமுகவில் அதிகரிக்கும் சாதிய பாகுபாடு.. போட்டுடைத்த மல்லை சத்யா...
Mallai Sathya About Caste Discrimination in MDMK : மதிமுக எனும் சமூக சிந்தனையுள்ள கட்சியில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க, இன்று எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வி மதிமுகவின் நீண்ட தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Mallai Sathya About Caste Discrimination in MDMK : தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்த வை.கோபால்சாமி எனும் வைகோவிற்கு என தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியபோது, 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது.
காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வைகோவுடன் சென்றனர்.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவின் மதிமுகவில் இன்று வாரிசு அரசியல் தலைத் தூக்கியுள்ளதோடு, சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக மதிமுகவை சேர்ந்த மூத்த தலைவர்களே வேதனை தெரிவிக்கின்றனர். ம.தி.மு.க-வுக்குள் நடக்கும் பல்வேறு மாற்றங்களைக் குறிப்பிட்டு, `ம.தி.மு.க-வை, தி.மு.க-வுடன் இணைத்துவிடலாம்' என கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார், அந்தக் கட்சியின் அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி.
மதுரை தெற்கு தொகுதி (மதிமுக) எம்எல்ஏ பூமிநாதன் ராஜினாமா செய்வதாக அறிவித்தது என தொடர்ந்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் துரைவைகோ தலைமை பதவிக்கு வந்ததில் இருந்தே கண்டனக் குரல்களையும் அதிருப்திகளை தெரிவித்து வந்தனர். அண்மையில் கூட மக்களவைத் தேர்தலின்போது மதிமுக சார்பில் திருச்சி தொகுதியில் துரைவைகோ போட்டியிடக் கூடாது என்ற குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுந்தது. இதையெல்லாம் மீறித்தான் துரை வைகோ நின்று வெற்றி பெற்று எம்.பி. ஆகி உள்ளார்.
ஒருபக்கம் தலைமைமீதான அதிருப்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றால்,மறுபக்கம் மதிமுக எனும் சமூக சிந்தனையுள்ள கட்சியில் சாதிய பாகுபாடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதிமுக துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யாவே ஒரு பதிவை போட்டுள்ளார். இந்த பதிவு தான் இன்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவில் சிவகாசி மாணவர் அணி அமைப்பாளராக உள்ள மாரிசாமி என்பவர், மல்லை சத்யாவை குறிப்பிட்டு ஒரு பதிவை போட்டுள்ளார்.
What's Your Reaction?