#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7
#BREAKING கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் - மேலும் 3 பேர் மீது குண்டாஸ் | Kumudam News 24x7
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?