The GOAT Movie Special Show : சிறப்பு காட்சிக்கு அனுமதியா? டிக்கெட் விலை அதிகமா? தியேட்டரில் த.வெ.க கொடி பறக்குமா?
The GOAT Movie Special Show : இதுவரை கோட் படத்துக்கு பாடல் வெளியீட்டு விழா நடக்கவில்லை. விஜயும் படம் குறி்த்து பேசவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 5 தேதி படம் வெளியாகிற நிலையில், படத்துக்கு ஓபனிங் எப்படி? அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? சிறப்பு காட்சிக்கு அரசு ஓகே சொல்லுமா? கோலிவுட் தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்
The GOAT Movie Special Show : வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் கோட் படம், செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் உலகம் முழுக்க 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஸ்கிரீனில் வெளியாகிறது. இந்த தகவலை சமீபத்தில் நடந்த கோட் பிரஸ்மீட்டில் கூறினார் ஏஜிஎஸ் நிறுவன கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. பட வெளியீட்டுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோட் தியேட்டர் புக்கிங் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னையில் பல தியேட்டர்களில் புக்கிங் விறுவிறுப்பாக நடக்கிறது. இது குறித்து சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்திடம் பேசினோம். அவர் கூறியது:
கோட் படத்துக்கான புக்கிங் விறுவிறுப்பாக நடக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட அதிக அளவில் டிக்கெட் புக்கிங் நடக்கிறது. ஒரு வாரத்துக்கு பல ஆயிரம் டிக்கெட் புக் ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். பொதுவாக, முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை நாங்கள் அதிகாலை காட்சியாக திரையிடுவோம். ஆனால், சமீபகாலமாக அப்படி நடைமுறை இல்லை. அரசு அனுமதி இல்லை. அதனால், சென்னை ரோகிணி தியேட்டரில் கோட் முதல்காட்சி செ ப்டம்பர் 5ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல் சிறப்பு காட்சிக்கு இதுவரை அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் செப்டம்பர் 5ம் தேதி 5 காட்சிகள் திரையிடுவோம். இல்லாவிட்டால் 4 காட்சி மட்டுமே. அரசு நிர்ணயித்த விலைக்கே டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. எங்கள் தியேட்டரில் ஒரு டிக்கெட் விலை ரூ 390 என தகவல் பரவியது. அது உண்மை. ஆனால், அது டிக்கெட் விலை மட்டுமல்ல, தண்ணீர், ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பேக்கேஜ் ஆபர். அதனால், ரூ 390. பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களின் முதல்காட்சியை எங்கள் தியேட்டரில் ரசிகர்கள், படக்குழுவினருடன் பார்த்து ரசிப்பார்கள். கோட் டீமும் அப்படி வந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருக்கிறோம். இந்த ஆண்டு அதிக வசூலை கோட் உருவாக்கும். விஜய் படங்களில் இது புது சாதனை படைக்கும் என நம்புகிறோம்’ என்றார்.
தமிழகத்தில் 9 மணிக்கு முதல் ஷோ என்றாலும், பெங்களூரில் கோட் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு சில தியேட்டர்களில் தொடங்குகிறது.கே ரளாவிலும் அதிகாலை 4 மணி்க்கு வெளியாகிறது. அந்த மாநிலத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால் இந்த நடைமுறை என தகவல். துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தமிழகத்துக்கு சில மணி நேரம் முன்னமே படம் தொடங்குகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முன்னால் ஷோ போடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் இருக்கிறது. பல மாதங்களாக அதிகாலை காட்சிக்கும் அரசு அனுமதி கொடுப்பது இல்லை. கோட் படத்துக்கு பெரியளவில் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனோ அது நடக்கவி்ல்லை. அதேபோல், சில நாட்களுக்கு முன்பு கோட் படக்குழுவினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பிரஸ்மீட் சென்னையில் நடப்பதாக இருந்தது. அதுவும் கடைசி நேர த்தில் ரத்து செய்யப்பட்டது. இதுவரை கோட் குறித்து விஜய் ஒரு வார்த்தை கூட, எங்கும் பேசவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையிலும், கோட் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. படம் 100 கோடி,200 கோடி, 400 கோடி, 500 கோடி வசூலை தாண்டுமா? அதைவிட அதிகமாக வசூலித்து சாதனை படைக்குமா? அல்லது எதிர்பார்த்த வசூலை பெறாமல் போகுமா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும். கோட் படம் ரிலீஸ் ஆவதால், தியேட்டர் பிரச்னை காரணமாக, வேறு எந்த பெரிய படமும் அடுத்த வாரம் வெளியாகவில்லை. சோலாவாக வெளியாகும் கோட் எவ்வளவு வசூலிக்கப்போகிறதோ என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழில் வெளி வந்த படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 4, விஜய்சேதுபதியின் மகாராஜா , விக்ரமின் தங்கலான படங்கள் 100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தனது படங்கள் வெளியாகும் முன்பு விஜய் எங்கும் செல்வது இல்லை. சிறப்பு வழிபாடுகள் செய்வது இல்லை. ஆனால், கோட் ரிலீஸ், விக்கிரவாண்டி மாநாடு போன்ற காரணங்களுக்காக ஷீரடி சாய்பாபா தரிசனம் செய்ய இன்று காலை சென்று இருக்கிறார். கோட் படம் வெளியாகும் தியேட்டர்களில் த.வெ.க சமீபத்தில் அறிமுகப்படுத்திய கொடி பறக்குமா? அதற்கு த.வெ.க தலைவரான விஜய் அனுமதி கொடுப்பாரா என்பது சில நாட்களில் தெரிய வரும்.
**
What's Your Reaction?