இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு சமூக ஊடக தளமாக Instagram உள்ளது. இத்தளம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தளம் அதிகப்படியான யூசர்களை (Users) கொண்டுள்ளதால் ஒவ்வொரு நாட்டிலும் பிரபலமாக இருக்கும் கலைஞர்களையும், மக்களையும் அறிய நமக்கு உதவி செய்கிறது.
யூசர்கள் வீடியோக்கள், ரீல்ஸ்கள், புகைப்படங்களை Instagram-ல் பதிவிடுவதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகின்றனர். Instagram நிறுவனமானது யூசர்களை கவரும் விதமாக அவ்வப்போது இந்த தளத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருகின்றன. முன்னதாக நமக்கு பிடித்த ரீல்ஸ்களுக்கு நோட் (Note) போடும் வசதியை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, தற்போது நமது லைவ் லோகேஷனை (Live Location) ஷேர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் (Whatsapp) போன்ற செயலிகளில் இந்த லைவ் லோகேஷன் ஷேர் செய்யும் ஆப்ஷன் இருந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யூசர்கள் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கு தான் இருக்கும் இடத்தை லைவ் லோகேஷன் மூலம் ஷேர் செய்யலாம். இந்த லைவ் லோகேஷனானது நாம் யாருக்கு பகிர்கிறோமோ அவர்களை தவிர வேறு யாரும் பார்க்க முடியாத அளவிற்கு பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த லைவ் லோகேஷனானது ஒரு மணி நேரத்திற்கு பின்பு அதுவே நீங்கிவிடும். இடையில் நமக்கு தேவையில்லை என்றால் நாமும் அதனை நீக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், Instagram, 17 புதிய ஸ்டிக்கர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் நாம் சாட் (Chat) செய்யும் போது பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பும் போது நமது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக இந்த ஸ்டிக்கர்கள் இருக்கின்றன.
தொடர்ந்து, Instagram-ல் உங்களுக்கு பிடித்த நண்பர்களின் பெயரை செல்ல பெயர் வைத்து சேமிக்கும் (Save) வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றம் உங்களுக்கு மட்டுமே தெரியுமே தவிர மற்ற யூசர்களின் பெயர்களில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?