Oscar Award 2025 : ஆஸ்கரில் என்ட்ரியான லாபதா லேடீஸ்... போட்டியில் தங்கலான், வாழை, மகாராஜா..?

Laapataa Ladies Movie Enters in Oscar Award 2025 : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் திரைப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் தங்கலான், வாழை, மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா XXL படங்களும் இடம்பெற்றுள்ளன.

Sep 23, 2024 - 13:56
Sep 23, 2024 - 14:42
 0
Oscar Award 2025 : ஆஸ்கரில் என்ட்ரியான லாபதா லேடீஸ்... போட்டியில் தங்கலான், வாழை, மகாராஜா..?
ஆஸ்கரில் என்ட்ரியான லாபதா லேடீஸ்

Laapataa Ladies Movie Enters in Oscar Award 2025 : 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான படங்கள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க, இந்தியாவில் இருந்து மொத்தம் 29 படங்கள் போட்டியிட்டன. இதில் இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் லாபத்தா லேடீஸ்(Laapataa Ladies) என்ற இந்தி மொழி திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமீர்கானின் மனைவி கிரண் ராவ் தயாரிப்பில் அவரே இயக்கிய இந்தப் படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரியளவில் வரவேற்பையும் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது லாபதா லேடீஸ்(Laapataa Ladies). பெண்களின் பாலின சமத்துவம், கல்வி உரிமை குறித்து பேசியிருந்தது இத்திரைப்படம். லபதா லேடீஸ் வெளியான போதே, இது ஆஸ்கரில் விருது வெல்லும் என விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், தற்போது இந்திய திரைப்பட சம்மேளனம் சார்பில் அபிஸியலாகவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்போட்டியில் இடம்பெற்றிருந்த 29 படங்களில், தமிழில் இருந்து 6 திரைப்படங்கள் இருந்தன. சீயான் விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான தங்கலான், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா XXL, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி, பாரி இளவழகன் இயக்கிய ஜமா படங்களும், இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரையில் இடம்பெற்றிருந்தது. அதேபோல், மலையாளத்தில் ஆட்டம் திரைப்படமும் இப்போட்டியில் இருந்தது. இந்தாண்டுக்கான தேசிய விருது அறிவிப்பில் சிறந்த படத்துக்கான விருதை ஆட்டம் வென்றிருந்தது.

வெளிநாட்டு மொழி பிரிவில் இந்தியாவில் இருந்து லாபதா லேடீஸ்(Laapataa Ladies) திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா, ஜமா, மகாராஜா படங்கள் நேரிடையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்வார்கள் எனவும், அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. கடந்தாண்டு தமிழில் இருந்து பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விழாவில், லாபதா லேடீஸ்(Laapataa Ladies) படத்துக்கு விருது கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேபோல், தங்கலான் வெளியாகும் முன்னரே இந்தப் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வோம் என தயாரிப்பாள ஞானவேல்ராஜா கூறியிருந்தார். அதனால் தங்கலான் திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கு தனியாக போட்டியிடும் எனத் தெரிகிறது. கடந்தமுறை ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக, இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow