சினிமா

விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்திய சூர்யா... இது தரமான சம்பவம்.. கங்குவா மேடையிலும் விஜய்!

ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு என விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்திய சூர்யா... இது தரமான சம்பவம்.. கங்குவா மேடையிலும் விஜய்!
விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்திய சூர்யா... இது தரமான சம்பவம்.. கங்குவா மேடையிலும் விஜய்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா நவம்பர் 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக். 26) சென்னையில் நடைபெற்றது. 

முன்னதாக கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளான ‘யோலோ’ என்ற பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், கங்குவா படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாடலாசிரியரும் ஸ்க்ரிப்ட் ரைட்டருமான மதன் கார்க்கி தான், கங்குவா படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். இந்தப் படத்தின் வசனங்களை இயக்குநர் சிவாவுடன் மதன் கார்க்கியும் இணைந்து எழுதியுள்ளதாக தெரிகிறது.

நவம்பர் 14ம் தேதி சிங்கிளாக ரிலீஸாகும் கங்குவா, பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மட்டுமின்றி, இந்தியாவில் பல மொழிகளில் ரிலீஸாகிறது. அதேபோல் உலகளவிலும் ஒட்டுமொத்தமாக 32 மொழிகளில் கங்குவா ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதில் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். 

அதன்படி சென்னையில் நேற்று நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “என்ன வெறுப்பை விதைத்தாலும் நாம் அன்பை மட்டுமே பரிமாறுவோம். வீட்டில் உள்ள அத்தனை பெண்களுக்கும் நன்றி. சூரியன் மேலே இருந்தால் ஒரு புதிய விடியல் கிடைத்திருக்காது. ரசிகர்களாகிய உங்களின் அன்பு எனக்கு விலைமதிப்பில்லாதது. வில்லில் அம்பு பின்னால் சென்றால் தான் நினைத்த இலக்கை அடைய முடியும். அன்பாக இருப்போம், நல்லதையே செய்வோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், “இன்னொரு நண்பர் இருக்காரு; ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு.. அவரோட வரவு நல்வரவாக இருக்கட்டும்” என விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.