4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?
Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy Rain in Tamil Nadu : தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 32 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டியது. தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டியது. வெயிலில் இருந்து எப்போது தப்பிக்கலாம் என சென்னை மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதலே மழை கொட்டியது.
மயிலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மந்தைவெளி, திருவான்மியூர், கிண்டி, ஆதம்பாக்கம், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராயப்பேட்டை, மெரினா, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டியது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இந்நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்(Chennai Meteorological Department
திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?






