இனியும் தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும்... திண்டுக்கல் ஐ.லியோனி ஆவேசம்!
ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை சேர்த்து பாட வேண்டும் எனவும் மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் என திண்டுக்கல் ஐ.லியோனி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை சேர்த்து பாட வேண்டும் எனவும் மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் எனவும் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு புத்தகத் திருவிழா நான்கு நாட்களாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் ஐ லியோனி, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்பு மாணவர்கள் அதிகமாக அறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள், உங்கள் வாழ்க்கை தரம் மாறும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
மேலும் அனைத்து விதமான புத்தகங்களும் 50க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இங்கு வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களும் தமிழ் சமூக ஆர்வலர்களும் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதற்கிடையே மேடையில் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மாணவர்களுக்கு புத்தகங்களின் மகத்துவம் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை சேர்த்து பாட வேண்டும் எனவும் மீண்டும் இதுபோன்ற தவறு நடந்தால் தமிழ்நாடு கொந்தளிக்கும் எனவும் ஆவேசமாகப் பேசினார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
What's Your Reaction?