ஃபெஞ்சல் புயல்..  90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Nov 30, 2024 - 08:09
 0
ஃபெஞ்சல் புயல்..  90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று..  வானிலை மையம் எச்சரிக்கை..!
ஃபெஞ்சல் புயல்..  90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது புதுச்சேரிக்கு தென்கிழக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. நாளை 30 ஆம் தேதி காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரி அருகே புயலாக கரையை கடக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான நாகபட்டினம். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள் உள்ளிட்ட புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை  வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசகூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் காரணமாக அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழக மற்றும் புதுவை பகுதிகளில் பரவலான விதவை மற்றும் கனமழை ஒருஇரு இடங்களில் அதிக கன மழை பெய்யும் என்றும், புதுவை விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழையும், தஞ்சாவூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow