மகா கும்பமேளா 2025: ரயில் நிலையத்தில் ஏசி கோச்சை அடித்து நொறுக்கிய பக்தர்கள்

கும்பமேளாவிற்கு செல்வதற்காக பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Feb 11, 2025 - 13:34
Feb 11, 2025 - 14:25
 0
மகா கும்பமேளா 2025: ரயில் நிலையத்தில் ஏசி கோச்சை அடித்து நொறுக்கிய பக்தர்கள்
ஏசி கோச்சை அடித்து நொறுக்கிய பக்தர்கள்

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 43 கோடிக்கு மேல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.

மேலும் படிக்க: மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

இந்நிலையில், பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் பக்தர்கள் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அண்டை மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்வதற்காக மதுபானி ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது, பிரயாக்ராஜ் வழியாக டெல்லி செல்லும் 
ஸ்வதந்திர செனானி அதி விரைவு ரயிலானது மதுபானி ரயில் நிலையத்திற்கு வந்தது.

அந்த ரயிலில் பக்தர்கள் பலர் ஏற முண்டியடித்து சென்றனர். அப்போது, ரயில் பெட்டிகளில் அதிகப்படியான பயணிகள் நிரம்பி இருந்ததால் ரயில் கதவுகள்  திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வெளியில் இருந்து ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் நடந்த போது ரயில் அதிகாரிகள் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் மதுபானி ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணிநேரத்திற்கு பின்னரே ரயில் புறப்பட்டு சென்றது என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow