மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். :

Feb 10, 2025 - 12:33
Feb 10, 2025 - 12:50
 0
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய திரெளபதி முர்மு

Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 41 கோடிக்கு மேல் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர்.

மேலும் படிக்க: மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உட்பட பலர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். அந்த வரிசையில் இன்று (பிப் 10) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பிரயாக்ராஜுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் திரெளபதி முர்மு புனித நீராடினார். 

இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக பெளஷ பெளர்ணமி (ஜன. 13), மகா சங்கராந்தி (ஜன. 14), மெளனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பெளர்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய ஆறு நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து துறவிகள், பக்தர்கள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow