கடற்கரைகளில் ஆமைகள் உயிரிழப்பு.. வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சி..!
சென்னையில் கடற்கரைகளில் அடுத்தடுத்து ஆமைகள் உயிரிழந்து கிடக்கும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கடற்கரை பகுதிகளில் இறந்த நிலையில் ஏராளமான ஆமைகள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் அடுத்தடுத்து ஆமைகள் உயிரிழந்து கிடக்கும் சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசிமேடு கடற்கரை பகுதியில் இதேபோன்று உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் தற்போதும் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 50 மீட்டர் தொலைவில் 50க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கி உள்ளது. இதே போல திருவொற்றியூர், காசிமேடு, ஈஞ்சம்பாக்கம், நெம்மேலி மெரினா கடற்கரை, பட்டினமாக்கம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கி உள்ளது.
நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதேபோல, கடற்கரை நோக்கி வரும்போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறை அலுவலர்கள் கருதக்கூடிய நிலையில் இறந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்க காரணம் இதுவரை தெரியவில்லை.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று சில ஆமைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கொத்துக்கொத்தாக ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கியிருப்பது வன விலங்குகள் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?