திடீரென ஒன்று கூடிய 100க்கும் அதிகமான திருநங்கைகள்... திக்குமுக்காடிய காவல் ஆணையர் அலுவலகம்

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவிகள் குறித்து இழிவாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

Nov 12, 2024 - 05:27
 0
திடீரென ஒன்று கூடிய 100க்கும் அதிகமான திருநங்கைகள்... திக்குமுக்காடிய காவல் ஆணையர் அலுவலகம்
திடீரென ஒன்று கூடிய திருநங்கைகள்... திக்குமுக்காடிய காவல் ஆணையர் அலுவலகம்

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை காவல் ஆணையர் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை காவல் ஆணையர் அலுவலகம் திருநங்கைளினால் போராட்டத்தால் மிகுந்த பரபரப்போடு காணப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை கீழ்ப்பாக்கம் காவல் துணை ஆணையர் தலைமையிலான போலீசார்  சாலையோரமாக அமர வைத்தனர். போலீசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம்  பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஜீவா உள்ளிட்ட 5 பேரை மட்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.  பிறகு திருநங்கைகள் ஜீவா, ரஜினி அம்மா ஆகியோர் உள்ளே சென்று புகார் அளித்த நிலையில், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு என்பது சார்பில் 21 தலைவிகள் நியமிக்கப்பட்டு திருநங்கைகள் அவர்களுக்கு கீழ் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வித்துறை, தனியார் நிறுவனங்கள்,  சுய தொழில் என பல்வேறு துறைகளில் உயர்ந்து வரும் திருநங்கைகளுக்கு தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பண உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆலந்தூரைச் சேர்ந்த மந்த்ரா மீது தேசிய கூட்டமைப்பு திருநங்கைகள் புகார் அளித்து இருந்தனர். அதில் திருநங்கை மந்திராவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று சமூகமாக செல்வதாக எழுதி வாங்கிகொண்டு அனுப்பி வைத்தனர்.

பிறகு மந்திரா, தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு என் பக்கமும் திருநங்கை உள்ளார்கள். அவர்களுக்கும் கல்வி உதவி மேற்கொள்ள பணம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 5 லட்சம் ரூபாய் பணம் கேட்ட பின்பு கூட்டமைப்பில் இருந்து அவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்த நிலையில் கேட்டவுடன் பணத்தை அளித்து விட்டதால் இன்னும் மிரட்டி கேட்டால் பணம் அதிகமாக கொடுப்பார்கள் என ரவுடிகளை வைத்துக் கொண்டும், youtube சேனலில் தேசிய திருநங்கை கூட்டமைப்பு குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

திருநங்கைகள் பாலியல் தொழில் நடத்துவதாக அவதூறாக பேசி வரும் மந்த்ரா மீது  நடவடிக்கை எடுக்ககோரி புகார் அளித்துள்ளோம். 

ஏற்கனவே அவர்கள் போலீசார் முன்னிலையில் சமரசம் பேசி எந்த ஒரு பிரச்சினையும் ஈடுபட மாட்டோம் என கூறியதையடுத்து நாங்கள் எவ்வித தொடர்பும் மந்த்ராவுடன் இல்லாமல் செய்யப்பட்டு வருகிறோம். ஆனால் அவர் ரவுடிகளை வைத்து, வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வரும் திருநங்கைகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்துவதாகவும், அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை இனி அனுமதிக்க மாட்டோம்  என்று கூறினர்.

 சமூகத்தில் பின் தங்கியுள்ள நாங்கள்,  நல்ல முறையில் முன்னேறி வரும் நேரத்தில் இது போன்று ஒரு திருநங்கை செய்யும் செயலால் மொத்த திருநங்கைகளுக்கும் அவப்பெயர் உண்டாகும் நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளதாக  தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஜீவா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow