ஊழல் வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செந்லான ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

Jan 23, 2025 - 21:28
Jan 23, 2025 - 21:28
 0
ஊழல் வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்..!
ஊழல் வழக்கு.. அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்..!

ஊழல் வழக்கில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001 - 2006 அதிமுக.,வில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்துள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டஏழு நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடராக சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

பின்னர், இந்த வழக்கு கடந்த 2020 ம் ஆண்டு அமலாக்கத்துறை  வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என கடந்த 2022 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள பிற நபர்கள் குறித்த சொத்து விவரங்கள் கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம் ஊள்ளிட்ட இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள், மதுரையில் தல்லாகுளம் உள்ளிட்ட 2 சார் பதிவாளர் அலுவலகங்கள், சென்னையில் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் என 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது. தூத்துக்குடி, மதுரை, சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 2021ஆம் ஆண்டு ஒரு கோடி மதிப்பிலான 18 அசையா சொத்துக்களை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow