"தமிழகஅரசு கொடுத்த அழுத்தத்தால் டங்க்ஸ்டன் ஏலம் ரத்து" - திருச்சி சிவா
தமிழர்களின் வாழ்வில் மிக முக்கிய நாள் இன்று, மேலும் தமிழ்நாடு அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மக்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் இதனை பெரிய வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.
What's Your Reaction?