#BREAKING || "இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம்"
இஸ்ரேலை ஒழித்துக் காட்டுவோம் என டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி சூளுரைத்துள்ளார்.
காசாவின் ஹமாசை எதிர்த்து 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கொன்ற இஸ்ரேல், லெபனானைத் தொடர்ந்து ஈரானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட மூத்த தலைவர்களை இஸ்ரேல் கொன்ற நிலையில், பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அரிய நிகழ்வாக டெஹ்ரானில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஈரானின் எதிரிகளை வீழ்த்துவோம் எனவும் ஹமாஸ், ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு தொடரும் எனவும் கூறினார். ஒரு நாட்டில் திருப்தியடைந்தால், அடுத்த நாட்டுக்குச் செல்லும் வழக்கம் ஈரானில் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலின் போர் குற்றங்களோடு ஒப்பிட்டால், ஈரானின் நடவடிக்கை மிகச்சிறிய பதிலடி தான் எனவும் அவர் கூறினார். அப்போது இஸ்ரேல், அமெரிக்காவுக்க சாவுமணி நேரம் தொடங்கி விட்டதாக மக்கள் முழக்கமிட்டனர்.
What's Your Reaction?






