ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் கடலூர் மாவட்டத்தில் இரு கோவில்கள் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 8, 2025 - 18:17
 0
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி- சென்னை உயர் நீதிமன்றம்

கடலூர் மாவட்டம், சோனாங்குப்பம் கிராமத்தில் உள்ள  வெங்கடேச பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு,  மார்ச் 11 ம் தேதி இரவு  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை நிராகரித்து கடலூர் துறைமுகம் போலீசார் உத்தரவிட்டனர்.

 இந்த உத்தரவை ரத்து செய்து, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, கடலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்லகூந்தல் அழகிய அம்மன் கோவில் திருவிழாவிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கணேசமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவுகளை ரத்து செய்து, கோவில்களில் நடக்கும் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். 

போலீஸ் பாதுக்காப்புக்காக மனுதாரர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் மனதை கெடுக்கும் விதமான ஆபாச நடனங்கள், ஆபாச மற்றும் இரட்டை அர்த்தங்களை கொண்ட வசனங்கள் இடம் பெறக்கூடாது. குறிப்பாக சாதி, மதம் மற்றும் அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என உத்தரவிட்டார். 

இந்த நிபந்தனைகளை மீறினால்,  போலீசார் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தான்டி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow