குற்றவாளிகளுக்கு போட்டியாக முதலமைச்சர் ரீல்ஸ் போடுகிறார் - அண்ணாமலை விமர்சனம்
கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்கு போட்டியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ரீல்ஸ் போடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற பதிவை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகவும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் பாலியல் வன்முறைகள் அரங்கேறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியரையே திமுக நிர்வாகி மிரட்டுவது, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருப்பதாகவும், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் தமிழக மக்கள் பலிகடாவா எனவும் மக்கல் குறித்து எப்போது யோசிப்பீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
What's Your Reaction?






