பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தும்,  பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும்,  பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Nov 30, 2024 - 10:03
 0
பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!
பொது போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும்,   நாளை ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான நாகபட்டினம். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள் உள்ளிட்ட புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பலத்த ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும், இடையிடையே 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறைசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work from Home) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவ.30) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது.

நாளை  (நவ.30)  பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நவ.20 புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

 சென்னை மாநகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைப்பகுதிகள் மூடப்படுகிறது .சென்னை ஓம்.எம்.ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் நாளை பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow