கொலைக்காரன் புதினுடன் இணைந்து பணியாற்றுவது என்ன செயல்.. டிரம்பை சாடிய ட்ரூடோ
அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல் என்று பிரதமர் ட்ரூடோ கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜனவரி மாதம் வரி விதிப்பை அறிவித்தார். தொடர்ந்து, இதை மார்ச் 4-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீது வரிகளை விதிக்கும் விரிவான திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் முடிவுகள் வர்த்தக சந்தையை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில் கனடாவின் இந்த பதிலடி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக போரை உருவாக்கியுள்ளது. இந்த வரி விதிப்பு குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது, “இந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமான செயல். அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் கனடா மீது கடுமையாக வரியை விதித்துவிட்டு கொலைகாரன் மற்றும் சர்வாதிகாரியான புதினுடன் இணைந்து பணியாற்றுவது எத்தகைய செயல்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க: காசாவில் தாக்குதல் நடத்த தயாராக உள்ள இஸ்ரேல் படை.. ஷாக் கொடுத்த நெதன்யாகு
மேலும், அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா 155 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கும் நடைமுறையை அமல்படுத்தும் என்றும் இதில் 30 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு உடனடியாக வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள 125 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களுக்கு 21 நாட்களில் வரிகள் விதிக்கப்படும் என்றும் ட்ரூடோ தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, அமெரிக்காவின் "சட்டவிரோத நடவடிக்கைகள்" அல்லது வரிவிதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கான திட்டங்களையும் ட்ரூடோ அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், இந்த பதிலடி வரி அனைத்தும் அமெரிக்க அரசாங்கம் அதன் வர்த்தக நடவடிக்கைகளை ரத்து செய்யும் வரை அமலில் இருக்கும் என்றும் கூறினார்.
கனடா, அமெரிக்கா மத்தியிலான வர்த்தக மோதலால் வருடத்தில் சுமார் 900 பில்லியன் டாலர்களுக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?






