5 அடி வித்தியாசம்.. உலகின் உயரமான பெண்னை சந்தித்த உயரம் குறைந்த பெண்

லண்டனில் உலகின் மிக உயரமான பெண்மணியும், உயரம் குறைந்த பெண்மணியும் சந்தித்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Nov 23, 2024 - 01:05
Nov 23, 2024 - 01:45
 0
5 அடி வித்தியாசம்.. உலகின் உயரமான பெண்னை சந்தித்த உயரம் குறைந்த பெண்
உலகின் உயரமான பெண்னை சந்தித்த உயரம் குறைந்த பெண்

உலகில் பல்வேறு தரப்பினர் பல முயற்சிகளை செய்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில், துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (rumeysa gelgi) என்பவர் உலகின் மிக உயரமான பெண்மணி  என்ற சாதனையை படைத்துள்ளார். துருக்கியில் பிறந்த ருமேசா கெல்கி வழக்கறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். 7 அடி 0.7 அடி (215.16 சென்டி மீட்டர்) உயரம் கொண்ட இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பாக, 2022 ஆம் ஆண்டு  ‘உலகின் மிகப்பெரிய கைகளைக் கொண்ட பெண்மணி’, ‘உலகின் நீளமான விரல்களைக் கொண்ட பெண்மணி’, ‘உலகின் நீளமான முதுகைக் கொண்ட பெண்மணி’ என்கிற மூன்று இடங்களையும் இவரேப் பெற்றிருந்தார். விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டதன் காரணமாக இவர் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோன்று, இந்தியாவைச் சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே (jyoti amge)கடந்த 2009-ஆம் ஆண்டு உலகின் உயரம் குறைந்த பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். 62.8 சென்டி மீட்டர் (cm) அதாவது, 2 அடி  0.7 அங்குலம் உயரம் கொண்ட இவர் அகோன்ட்ரோபிளாசியா (Chondroplasia) என்ற குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர வாய்ப்பில்லாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த உயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் உள்ள புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் தேநீர் மற்றும் உணவுகளை அருந்தி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து ருமேசா கெல்கி கூறியதாவது:-  நான் நீண்ட நாட்களாக இந்த சந்திப்பிற்காக காத்திருந்தேன். எங்கள் உயர வித்தியாசம் காரணமாக அவரை பார்த்து பேசுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும், நானும் அவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ருமேசா கெல்கி மற்றும் ஜோதி அம்கே-விற்கு கின்னஸ் உலக சாதனை குழு சான்றிதழ் வழங்கியது. இதுதொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை குழு அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow