அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டப் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வரும் எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் ஒன்று நிர்வாகத்திற்கு நேற்று வந்த நிலையில், ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபாப்பை ஏற்படுத்தியது.
கல்லூரிக்கு வந்த இமெயிலில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் எம்ஐடி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு விரைவில் வளாகத்தை அழிக்கும் என்றும், துணை முதல்வர் குடும்பத்தினர் குறித்தும் இமெயில் பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு குறித்தும் இமெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த மிரட்டல் குறித்து எம்ஐடி கல்லூரியின் டீன் ரவிச்சந்திரன் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வெடிகுண்டு புகாரை தொடர்ந்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் எம்ஐடி வளாகத்தை சோதனை செய்தனர். காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டனர்.
போலீசாரின் தொடர் விசாரணைக்கு பின்னர், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் அது புரளி என்பது தெரிய வந்தது. இந்த மிரட்டல் குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது எம்.ஐ.டி கல்லூரிக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புரளி என்ற வெளிவந்த பின்னரே கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் நிம்மதியடைந்தனர்.
What's Your Reaction?