Pala. Karuppiah : மான் கறி கிடைக்காமல் வருத்தப்பட்டேன்.. கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும்.. பழ.கருப்பையா
Pala. Karuppiah About Deer Meat : மான்கறி உண்ண வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்டேன் என்றும் கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும் என்றும் என்று பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.

Pala. Karuppiah About Deer Meat : வள்ளலாரின் 201வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு கவர்னர் மாளிகையில் உள்ள வள்ளலாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிரிப்புரையாற்றினார்.
இதில் சிறப்புரை ஆற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா(Pala. Karuppaiah), “காந்திக்குப் பிறகு நான் வள்ளலாரை படித்தேன். இப்படி எல்லாம் ஒரு மனிதன் மனித குலத்தில் வாழ முடியுமா என்று நான் வியப்படைந்தேன். ஒரு நாள் ஒரு பொழுதும் கூட புலால் இல்லாமல் நான் உணவு உண்டதே இல்லை.
தேடித்தேடி இறைச்சிகளை உண்டேன். புறா, வான்கோழி ஆகியவற்றை தேடி தேடி உண்டேன். மேலும் மான்கறி உண்ண வழி இல்லாமல் போனதே என்று வருத்தப்பட்ட காலத்தில் வள்ளலார் எனக்குள்ளே வந்தார்.
புலால் உண்ணாதவர்கள் எல்லாம் அகவினத்தார். அதை உண்கின்றவர்கள் எல்லாம் புரவினத்தார். அதுதான் என் ஜாதி என்று வள்ளலார் கூறினார். புலால் உணவு உண்ணாதவர்களும் உயிரினங்களை கொல்லாதவர்களும் வள்ளலார் வழியில் சேர வேண்டும் என்று அவர் எண்ணினார் அதன் அடிப்படையில் நானும் வள்ளலார் வழியில் இணைந்தேன்.
ஆளுநர் அவர்களே... கருணையில்லா ஆட்சி கருகி ஒழிக.. அருள் நாயர்ந்த நன்மார்க்கர் ஆள்க.... என்று வள்ளலார் கூருகிறார். நல்லவர்கள் வாழ வேண்டுமென்றால் நல்லாட்சி இருக்க வேண்டும் என்றும் வள்ளலார் கூருகிறார். அதன் வழியில் கருணையில்லா ஆட்சி கருகி ஒழியட்டும்” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






