தமிழ்நாடு

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில்  சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு
குன்னூர், உதகை இடையிலான மலை இரயில் ரத்து

குன்னூர் மற்றும் உதகை இடையான மலை இரயில்  சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குன்னூரிலிருந்து நாள்தோறும் உதகைக்கு இயக்கப்படும் மலை இரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்திற்கு மிக மற்றும் அதிக கன மழை இருக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக  கோத்தகிரி, கீழ் கோத்தகிரி , குந்தா, அவலாஞ்சி , குன்னூர் மற்றும் உதகை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது 

மேலும் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால்  சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குன்னூர் உதகை இடையேயான யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை இரயில்  சேவை இன்று (02.12.2024) மற்றும் நாளை (03.12.2024)ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக  தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

இதனால் மலை இரயில் பயணம் செய்ய முன் பதிவு செய்த சுற்றுலா பயணிகளின் முன் பதிவு செய்த கட்டண தொகையை திரும்ப அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது

தொடர் மழை காரணமாக மலை இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.