A.R. Rahman: இடைவெளியை நிரப்ப முடியாது... ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக சாய்ராபானு அறிவிப்பு..
திருமணமாகி 29 ஆண்டுகள் ஆன நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
AR Rahman Divorce: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவை முறித்துக் கொள்வதாக மனைவி சாய்ரா பானு அறிவித்திருக்கிறார். சாய்ரா பானு தன்னுடைய வழக்கறிஞர் மூலம் விவகாரத்து செய்தியை அறிவித்துள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். சமீப காலமாக ஏஆர் ரஹ்மானுடன் அடிக்கடி அமீன் மேடைகளில் தோன்றி வருகிறார்.
இந்நிலையில், 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் .
இது குறித்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், “திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும் சில சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை உணர்ந்துள்ளார்.
சாய்ரா வலி மிகுந்த சூழலுடன் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ராவுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் விவாகரத்து கலாச்சாரம் என்பது அதிகரித்து வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?