சினிமா

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!

சூர்யா நடிப்பில் சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

Kanguva Trailer: சூர்யாவின் கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... இதுதான் விஷயமா!
Kanguva Trailer Release Date

சென்னை: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இத்திரைப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கங்குவா முழுக்க முழுக்க ஆக்ஷன் ப்ளஸ் பீரியட் ஜானர் படமாக இருக்கும் எனவும், சூர்யா கேரியரில் இது தரமான சம்பவமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், அண்ணாத்த படத்தின் தோல்வியால் மோசமாக விமர்சிக்கப்பட்ட இயக்குநர் சிறுத்தை சிவா, கங்குவா மூலம் கம்பேக் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முக்கியமாக கங்குவா படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தியும் கேமியோவாக நடித்துள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. மேலும், கங்குவா 2ம் பாகத்தில் கார்த்தி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கங்குவா படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் ஹைப் இருந்தது. அதன்படி கங்குவா படத்தின் டீசர் அல்லது செகண்ட் சிங்கிள் தான் ரசிகர்கள் நினைத்திருக்க, ட்ரெய்லரை வெளியிட ரெடியாகிவிட்டது படக்குழு. திரைப்படம் ரிலீஸாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்க, அவசர அவசரமாக ட்ரெய்லரை வெளியிடுகிறது கங்குவா டீம். 

அதாவது வரும் (ஆக) 12ம் தேதி கங்குவா ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. பொதுவாகவே படம் வெளியாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு தான் ட்ரெய்லர் ரிலீஸாவது வழக்கம். ஆனால், ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள சீயான் விக்ரமின் தங்கலான் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தங்கலான், கங்குவா இரண்டுமே ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அதனால் தங்கலான் வெளியாகும் திரையரங்குகளில் கங்குவா ட்ரெய்லரை ஸ்க்ரீன் செய்தால் செம ப்ரோமோஷனாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். 

அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அபிஸியலாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் அதே நாளில் கங்குவா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்டையன் வெளியாவது தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், கங்குவா ட்ரெய்லர் வெளியானதும் உடனடியாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொடங்க படக்குழு பிளான் செய்திருந்தது. இப்போது அதிலும் ஒரு சிக்கல் இருப்பதால் படக்குழுவினர் சூர்யாவுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க - குறுந்தொகை வரிகளோடு காதல் கதை சொன்ன சோபிதா துலிபலா!

அதாவது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வந்தது. சூர்யா 44 படப்பிடிப்பு நடைபெற்று வந்த இடத்தில் பாம்புகள் தொல்லை அதிகம் இருந்ததால், அங்கிருந்து லொக்கேஷனை ஊட்டிக்கு மாற்றினார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், ஊட்டியில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சியின் போது, சூர்யாவின் தலையில் அடிப்பட்டதால், அவர் உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். இதனால் தற்போது சூர்யா 44 படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.