கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Mar 2, 2025 - 15:02
Mar 2, 2025 - 15:04
 0
கூல் சுரேஷ் கட்சியில் இணையும் காளியம்மாள்..? அதிரடியாக அறிவித்த நடிகர்
காளியம்மாள்-கூல் சுரேஷ்

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் கூல் சுரேஷ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் முதல் ஒவ்வொரு நடிகரின் திரைப்படம் வெளியாகும் போதும் அப்படத்தின் கெட்டப்பை அணிந்து கொண்டு திரையரங்கிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

’பொன்னியின் செல்வன்’ படம் வெளியான போது குதிரையில் வந்த கூல் சுரேஷ், விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் வெளியான போது ஆட்டை தூக்கிக் கொண்டு திரையரங்கிற்கு வந்திருந்தார். இவர் தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ், கரூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "பாலியல் குற்றம் என்பது அரசாங்கம் மற்றும் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நம்மிடமும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். எல்லா இடத்திற்குமே போலீசார் பின்னாடியே வர முடியாது. 8 கோடி மக்கள் தொகை இருக்கிறது. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு குற்றங்கள் குறைப்பதற்கு இரவு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது.

அதிகம் நகைகளை அணிந்து கொண்டு செல்வது பார்ப்பவர்களுக்கு திருடனும் என்று தோன்றுவதற்கு ஒரு எண்ணமாக அமைந்து விடுகிறது‌. அதனால் திருட்டு மற்றும் பாலியல் தாக்குதலில் இருந்து நம்மை நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சீமான் விஷயத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அது குறித்து சீமான் பதில் அளித்துள்ளார்.

 நடிகை அளித்த பதிலும் ஒன்றாக இருக்கின்றதா அல்லது வேறுபட்டு உள்ளதா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் சீமான் அண்ணன் மீது தவறில்லை என்றால் இல்லை என்று சட்டம் சொல்லும், தவறு இருந்தால் அது தவறு உள்ளது என்றும் சட்டம் சொல்லும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியே வரும்” என்று கூறினார்.

தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, எனக்கு ஒரு கட்சி உள்ளது. அது சிஎஸ்கே கட்சி. அதில் தமிழக வெற்றி கழகம் அல்ல திமுக, அதிமுக, பாஜக, பாமக எந்த கட்சியாக இருந்தாலும், மக்களுக்காக உழைப்பதற்காக கூல் சுரேஷ் கட்சி காத்துக் கொண்டுள்ளேன். எந்த கட்சி கூட வேணாலும் கூட்டணி சேர்ந்து கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பதற்கு தயாராக உள்ளேன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் கூல் சுரேஷ் கட்சியில் இணைய போகிறார்களா என்று ஒரு தகவல் வெளியானது. எங்கள் கட்சியில் காளியம்மாள் இணைய கூடாதா? காளியம்மாள் எங்கள் கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும். யார் வேண்டுமானாலும் வரலாம்.

அமெரிக்கா டிரம்ப் வந்தாலும் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும். நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி உள்ள காளியம்மாள் நீங்கள் எங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக வாங்கள் உங்களுக்காக உழைப்பதற்காக காத்துக் கொண்டிருப்பது தான் கூல் சுரேஷ் கட்சி என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow