என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Jan 12, 2025 - 17:10
 0
என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்
கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு சமீபத்தி தெரிவித்திருந்தது. 

நடிகர் அஜித் சினிமாவில் எத்தனையோ சாதனைகள் படைத்தாலும் பைக் மற்றும் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், பைக்கில் பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவர் பெரும்பாலும் தனது படங்களில் வரும் கார் மற்றும் பைக் ரேஸ்களில் டூப் இல்லாமல் தானே கலந்து கொண்டு நடித்துள்ளார். இதனால் விபத்துகள் ஏற்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் நடித்திருப்பார்.

2010-ஆம் ஆண்டிற்கு பிறகு கார் ரேஸ் பக்கம் செல்லாமல் இருந்த அஜித் தற்போது தனது இலக்கை நோக்கி மீண்டும் ஓட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கார் ரேஸிற்காக தனது உடல் எடையும் குறைத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.  இந்நிலையில், துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் அணி பங்கேற்றது. 24 மணிநேரம் நடைபெறும் இந்த ரேஸில் தொடர்ச்சியாக காரினை ஓட்ட வேண்டும். 

ஒரு அணியில் மூன்று முதல் நான்கு ஓட்டுநர்கள் இருப்பார்கள் அவர்கள்  தலா 6 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரம் காரினை  ஓட்ட வேண்டும். இதனால் அஜித்தின் ரேஸிங் அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்பு  பயிற்சியின் போது அஜித் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது. 

தொடர்ந்து நேற்று ரேஸ் தொடங்குவதற்கு முன்பாக ஒரேயொரு அணிக்காக மட்டுமே அஜித் கார் ஓட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow