பள்ளியில் வாயு கசிவு..மாணவர்களுக்கு மூச்சு திணறல்..கசிவுக்கான காரணம் என்ன?
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு காரணமாக மாணவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் நேற்று பிற்பகல் திடீரென கெமிக்கல் வாசம் வீசியது. இதனால், மாணவர்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டனர். சில மாணவிகள் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. 30-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து பள்ளியில் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பள்ளியில் கடந்த 3 நாட்களாகவே இதுபோன்ற துர்நாற்றம் வீசுவதாக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாகவும், அதை ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் அலட்சியப் படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை மாதவரம் திமுக MLA சுதர்சனம் மற்றும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி, திமுக முன்னாள் எம்எல்ஏ குப்பன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பேட்டியளித்த அவர்கள், மாணவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், வாயு கசிவு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இதனிடையே வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர். அதன் பின் பேட்டியளித்த கமாண்டர் சௌகான், பள்ளியில் தற்போது வாயு கசிவு இல்லை எனக் கூறினார்.
மேலும் படிக்க: ஹீரோவாக அறிமுகமாகும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா... ஹபீபி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
ஆய்வகம், கழிவறை, குளிர்சாதன பெட்டி போன்றவற்றை ஆய்வு செய்ததில் வாயு ஏதும் வெளியேறவில்லை எனவும் வாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை எனவும் கூறினார்.
What's Your Reaction?






