”எனக்கு அனுபவம் கம்மிதான்.. ஆனா...” - இபிஎஸ்-க்கு உதயநிதி நினைவூட்டிய flashback
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் மூத்த அமைச்சர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற கதை மக்களுக்கு தெரியும். ஆனால் அதிமுக நிலைமை திமுக எப்போதும் ஏற்படாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் மூத்த அமைச்சர்களை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற கதை மக்களுக்கு தெரியும். ஆனால் அதிமுக நிலைமை திமுக எப்போதும் ஏற்படாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை.விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நெல்லையில் எனக்கு அனுபவமே கிடையாது என்று விமர்சனம் வைத்து உள்ளார். அதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. நான் பொறுப்பு ஏற்கும்போது என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன் என்று சொல்லி இருந்தேன். என்னை விட அனுபவம் வாய்ந்தவர் தான். ஒப்புக்கொள்கிறேன். அதற்கு முன் மக்களுக்கும் அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
2016ம் ஆண்டு ஜெயலலிதா இறந்த பின் அடுத்த முதலமைச்சர் யார் என்று வினவிய போது பல மூத்த அமைச்சர்கள் இருந்தார்கள். செங்கோட்டையன் தான் அடுத்த முதலமைச்சர் என்றார்கள். செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இருந்தார்கள். எல்லாரையும் விட மூத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். இவர்களை எல்லாம் மீறி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார்.
அந்த கதை, நாடகம் எல்லாத்தையும் தொலைக்காட்சி நேரலையில் மக்கள் பார்த்தார்கள். கூவத்தூரில் அடித்த கூத்து, எப்படி முதலமைச்சர் ஆனார் அப்படி என்பதை மக்கள் பார்த்தார்கள். மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன் இதையும் யோசித்து பார்த்து பேசி இருக்க வேண்டும்.
எனக்கு தந்துள்ளது பதவி கிடையாது. இதை பதவியாக பார்க்காமல் கூடுதல் பொறுப்பாக உணர்கிறேன். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின் அடுத்த 4 ஆண்டுகள் ஆட்சியை கொண்டு செல்ல தான் முதலமைச்சர்- துணை முதலமைச்சர் என்று எடப்பாடி பழனிச்சாமியும் ஒ.பன்னீர்செல்வமும் பங்கு போட்டு கொண்டனர். ஆட்சியை இழந்ததும் கட்சி 3,4 ஆக பிரித்து விட்டது. .
இது போன்ற நிலைமை திமுகவிற்கு எப்போதும் வராது. முதலமைச்சர் தான் எப்போதும் முதன்மையானவர். அவர் தான் கட்சி தலைவர். எந்த காலத்திலும் அவர் தான் தலைவர். கூடுதல் பொறுப்பு என்பது சென்னையில் வெள்ளம் வர போகிறது முதலமைச்சர், அமைச்சர்கள் உளபட அனைவரும் களத்தில் போய் நின்றோம். அதே பசுமை வழி சாலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி வீடும் இருக்கிறது.
மேலும் படிக்க: போலீசிடம் தகராறு செய்த ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை.. உடனடியாக வெளியான மன்னிப்பு வீடியோ!
அவர் வெளியே கிளம்புகிறார் என்றதும் மக்களை சந்தித்து வெள்ள பாதிப்புக்காக நிவாரணம் தரப்போகிறார் என நினைத்தோம். ஆனால் அவர் பிளைட் ஏறி சேலம் போய் விட்டார். இந்த நேரத்தில் மக்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்கள் தான் மக்கள் மனதில் இருப்பார்கள்,” என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
What's Your Reaction?