கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 29, 2024 - 14:28
 0

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. திருவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow