இனி வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம்... அதிரடியாக களமிறங்கும் Zomato
Zomato நிறுவனம் திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள் , நேரடி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 'ஜில்லா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவு விநியோக தளமான Zomato iOS மற்றும் Android பயனர்களுக்காக அதன் புதிய 'மாவட்ட' பயன்பாட்டு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு உணவு சேவைகளை வழங்குவது மட்டுமில்லாமல் திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகள், நேரடி நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் அம்சத்துடன் வெளியாக உள்ளது.
Zomato-வின் இந்த புதிய iOS மற்றும் Android க்கான இரண்டு தளத்திலும் கிடைக்கிறது. அதன் உணவு விநியோக சேவை மற்றும் BlinkIT இன் விரைவான வர்த்தக தளத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த மூன்றாவது சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து, Zomato CEO தீபிந்தர் கோயல் , Q1FY25 பங்குதாரர்களின் கடிதத்தில், “இன்று, Zomato மற்றும் Blinkit எங்கள் இரண்டு பெரிய நுகர்வோர் வணிகங்கள், இரண்டும் வாடிக்கையாளர்களின் தேவைகளை வீட்டிலேயே வழங்குகின்றன. இருப்பினும், இந்தியாவின் மிகப்பெரிய வணிகங்களில் ஒன்று எங்களிடம் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு வெளியே சென்று உணவருந்த விரும்பும் போது உணவகங்களைக் கண்டறிய உதவும் எங்கள் சாப்பாட்டு வணிகம். இந்த டைனிங்-அவுட் வணிகம் இப்போது $500m+ வருடாந்திர GOV ரன்-ரேட்டில் லாபம் ஈட்டுகிறது. இதனைத் தொடர்ந்து சொமேட்டோவின் செயலியை விரிவுபடுத்துவதாக கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், உணவு சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக திரைப்படங்கள், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட், நேரலை நிகழ்ச்சிகள், ஷாப்பிங், தங்கும் இடங்கள் போன்றவைக்கான முன்பதிவு சேவைகளை வழங்குகிறது என்று கூறினார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நேரலை நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், போன்றவற்றிற்கு முன்பதிவு செய்யும் செயலிகளில் முன்னணியில் இருக்கும் BookMyShow போன்ற செயலிகளுக்கு போட்டியாக Zomato -வின் இந்த புதிய செயலி அமையும் என்று கூறப்படுகிறது. சொமேட்டோவிற்கான வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இந்த செயலி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?