Moto G45 5G விமர்சனம்... Phone Performance எப்படி இருக்கு?

Moto G45 5G Review in Tamil : அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகமான புத்தம் புதிய Moto G45 5G ஸ்மார்ட்போன் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Sep 26, 2024 - 15:35
Sep 26, 2024 - 16:33
 0
Moto G45 5G விமர்சனம்... Phone Performance எப்படி இருக்கு?
Moto G45 5G விமர்சனம்.

மொபைல் போன் விற்பனையில் இந்திய சந்தையில் மோட்டொரோலா நிறுவனம் புதிதாக புரட்சியை தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் பாமர மக்களின் பட்ஜெட்டுக்குள் அடங்கக்கூடிய புதிய Moto G45 5G மொபைல் போன்களை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. கண்களைக் கவரும் வகையில் பிரில்லியண்ட் புளூ, பிரில்லியண்ட் கிரீன் மற்றும் வைவா மெஜந்தா ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. 

Moto G45 5G விலை: 

4GB RAM/128GB கொண்ட Moto G45 5G  மொபைல் போன் ரூ. 10, 999க்கு விற்பனையாகிறது. இதே போல 8GB RAM/128GB கொண்ட Moto G45 5G  மொபைல் போனின் விலை ரூ. 12,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Moto G45 5G அம்சங்கள்: 

புதிதாக சந்தைக்கு வந்துள்ள Moto G45 5G மொபைல் போனில் 1600 x 720 pixels மற்றும் 120Hz refresh rate கொண்ட 6.45 inch HD+ டிஸ்பிளே உள்ளது. 500 nits வரை வெளிச்சத்தைக் கொடுக்ககூடிய இந்த டிஸ்பிளேவில் Corning Gorilla Glass 3 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் Qualcomm Snapdragon 6s Gen 3 chip, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்திற்காக Adreno 619GPU உள்ளிட்டவை அடங்கும். இதைத்தவிர 8GB - LPDDR4X RAM மற்றும் 128GB - UFS 2.2 ஸ்டோரேஜும் இடம்பெற்றுள்ளன.  

தற்போது மோடொரோலாவின் இந்த புதிய  Moto G45 5G மொபைல் எப்படி இருக்கிறது எனப் பார்க்கலாம். 

இதன் டிசைனை பொருத்தவரை, இதற்கு முந்தைய மாடலான Moto G34 டிசைனுடன் நிறையவே ஒத்துப்போகிறது. ஆனால் இதில் கொடுக்கப்பட்டுள்ள லெதர் ஃபினிஷ், போனை கைகளால் பிடிக்கும்போது நல்ல கிரிப்பை வழங்குகிறது. 

கேமராவை பொருத்தவரை, ஒரு புகைப்படத்தை கிளிக் செய்ய 1 அல்லது 2 வினாடிகள் தாமதமாவதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் புகைப்படங்களில் கிளேர் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றப்படி பார்த்தால் ஒவ்வொரு புகைப்படமும் தெளிவாகவும், நல்ல குவாலிட்டியுடனும் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அதிக வெளிச்சமுள்ள இடங்களில் போன் பிரைட்னஸ் போதுமான அளவு இல்லாததும் ஒரு சிறிய குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. இதைத்தவிர phone performance, phone updates மற்றும் பேட்டரி, சார்ஜின் போன்ற அனைத்தும் சிறப்பாக உள்ளதாக பயனாளர்கள் கூறுகின்றனர். 

பட்ஜெட்டில் தரமான மற்றும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் Moto G45 5G-யை வாங்கலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow