பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் - எம்.பி துரை வைகோ
பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் எனக்கூறிய மதிமுக முதன்மைச்செயலாளரும், எம்பியுமான துரைவைகோ, எனக்கு பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட ஈரோடு வருகை தந்தார். அப்போது மதிமுக கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக முதன்மைச்செயலாளர் துரை வைகோ தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். மறைந்த ஈவிகேஎஸ் ஈரோடு மக்களின் குரலாக சட்டமன்றத்தில் எதிரெலித்தார் என்றும் மக்கள் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பார்கள் ஏனெனில் இது பெரியாரின் மண் என்றார்.
அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக வேட்பாளரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற துரை வைகோ , வேங்கைவயல் சம்பவத்தில் நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்ததாகவும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கவனமாக தான் சிபிசிஐடி குற்றவாளிகளை சரியாக தான் அடையாளம் கண்டு இருப்பார்கள் என்றும் வேங்கைவயல் வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருப்பதால் சிபிஜ விசாரணை குறித்து நீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என்றார்.
பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்று தான் சொல்வேன் என்ற துரைவைகோ பெரியாரை இழிவுபடுத்தும் யாராக இருந்தாலும் ஈனப்பிறவி தான் என்றார். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் மத்திய அரசு இந்தியை திணிக்கிறார்கள் என்றும் UGC எதிராக திமுக மாணவர் அணி நடத்தும் டெல்லி போராராட்டத்தில் மதிமுக கலந்து கொள்ளும் என்றும் இதற்காக அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்தார்.
திராவிட இயக்கங்களுக்கு அடித்தளம் எல்லாம் பெரியார் கொடுத்து கொள்கை தான் என்றும் பெரியார் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற துரைவைகோ கருத்து மோதல் இருக்கும் , அதனால் தான் பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்து வந்தார. என்றும் பெரியார் கொள்கையை எல்லாலோரும் ஏற்க முடியுமா என்றால் இல்லை என்றார்.
எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்துவார் அதற்கு முகாந்திரம் இருந்தால் ஆதரிப்பேன் என்றும் திமுக கூட்டணியில் எந்த வித மாற்றமும் கிடையாது என்றும் இதுதொடரும் என துரை வைகோ தெரிவித்தார்.
What's Your Reaction?