பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவது தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

Jan 27, 2025 - 10:32
 0
பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்பதற்கு நாங்கள் தான் காரணம் - முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியில் பட்டாசு பாதுகாப்பு பேரவையினர் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் சிறு பட்டாசு தொழிற்சாலைகளின் உற்பத்தியாளர்களின் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

முந்தைய அதிமுக ஆட்சி காலங்களில் பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டது. பட்டாசு தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. 

சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் நவீன தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கி செயல்படுத்தப்பட்டது. கிராமப்புற பகுதிகளிலுள்ள பட்டாசு தொழிற் சாலைகளுக்கு சென்று வர சாலைகள் அமைக்கப்பட்டது. 

ஆனால் இன்றைய ஆட்சியாளர்களால் அவைகளை பராமரிக்கவும், புதுப்பிக்கவும் கூட முடியவில்லை என்று குற்றம் சாட்டினார். பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு  அதிமுக ஆட்சியின் போது யாராலும் இடைஞ்சல் ஏற்பட்டது கிடையாது. 

அதிமுக ஆட்சியில் நான் 10- வருடங்கள் அமைச்சராக இருந்தபோது வருவாய்த் துறையினரோ,  காவல்துறையினரோ பட்டாசு தொழில் செய்பவர்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்தியது கிடையாது. பட்டாசு தொழில் செய்பவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சவில்லை, கஞ்சா விற்கவில்லை, உழைத்துப் பிழைக்கின்ற தொழில் செய்கின்றனர். 

நாட்டின் தேவையில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் உற்பத்தியாகிறது. தொடர்ந்து, பாதுகாப்பான பட்டாசுகள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 ஆனால் சீனா பட்டாசுகள் கையில் வைத்திருந்தாலே வெடித்து விடும். 

அதிமுக ஆட்சியில் சீனா  பட்டாசுகள் இறக்குமதியாவதை தடுத்து நிறுத்தப்பட்டதால் தான், இன்றைய தினம் பட்டாசு தொழில் நீடித்து நிலைத்து நிற்கிறது.

 இன்றைய தினம் பட்டாசு தொழிற்சாலையில், தொழில் ரீதியான பிரச்சனையில், விபத்து நடப்பதற்கு காரணமே ஆய்வு என்ற பெயரில் செல்கின்ற அரசு அதிகாரிகளால் தான்.  பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பயந்து பயந்து வேலை பார்க்க முடியுமா? தொழிலாளர்கள் நிம்மதியாக  பணி செய்தால் தான், பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி செய்ய முடியும். 

பாதுகாப்பாக பட்டாசு தயார் செய்ய முடியாதளவுக்கு தொழிலில் பிரச்சனையுள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow