வெளிநாட்டில் வேலை.. பணத்தை ஏமாந்த மக்கள்.. ஏஜெண்டும் புகார் கொடுத்ததால் பரபரப்பு
கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கனடா நாட்டில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாகவும், இதற்காக விசா பெறுவதற்கு 2 லட்சம் ரூபாய் ஆகும் என கூறி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 43 பேரிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை பெற்று தரும்படி பணத்தை இழந்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழகர்கள் சங்கம் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
புகார் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்டவர்கள், முகமது அலி என்பவர் தங்களிடம் கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த வருடத்திற்கு முன்பு 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட நிலையில் தற்போது வரை வேலை வாங்கி தரவில்லை என்று தெரிவித்தனர். மேலும், பணத்தையும் திருப்பி தரவில்லை என்றும் இவரிடம் கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்டோர் பணத்தை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்
பணத்தை இழந்தவர்கள் புகார் அளித்தது ஒரு பக்கம் இருக்க பணத்தைப் பெற்ற ஏஜெண்டு முகமது அலி என்பவரும் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து முகமது அலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மலேசியாவில் இருக்கும் யாஸ்மின் என்பவர் தனது சகோதரர் மூலம் தனக்கு அறிமுகமானதாகவும் அவர் கனடாவில் புதிதாக தொடங்க உள்ள உணவகத்தில் வேலைக்கு ஆள் வேண்டும் என என்னிடம் கூறியதால் தெரிந்த நண்பர்கள் மூலம் நான் சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், விசா பெற்று தருவதற்காக ஒவ்வொருவரிடமும் இருந்து ரூபாய் இரண்டு லட்சம் பெற்று தனக்கு அனுப்பும்படி யாஷ்மின் என்பவர் கூறியதால் அனைவரிடமும் பணத்தை பெற்று அனுப்பியதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, பணத்தை இழந்தவர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதால் வேறு வழியில்லாமல் என்னிடம் இருந்து பணத்தை பெற்ற யாஸ்மின் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளதாக முகமது அலி தெரிவித்தார்.
What's Your Reaction?