அடியாட்களோடு வந்து தேவா மகள் மிரட்டுகிறார்... வைரலாகும் வீடியோவால் பகீர்!
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாடகைக்கு குடியிருந்துவரும், தீபிகா திடீரென கதறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தீபிகா தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டி விட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றதாகவும், உயிர் பிழைத்ததே பெரிது என கதறியபடியே தெரிவித்துள்ளார்.
எனக்கும் எனது கணவருக்கும் ஏதாவது உயிருக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு ஜெயப்பிரதாவும், செக்ரெட்டரி சுனிதாவும் தான் காரணம் எனவும் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக தீபிகா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெர்வித்த நிலையில் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாடகைக்கு வந்துள்ளார். அவர்களது ஹார்டுவேர்ஸ் கடை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி கடந்த ஒரு ஆண்டு காலமாக வாடகையை தராமல் இருந்து வந்ததால், மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது இருதரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, முறையாக வாடகை அளிப்பதாக கூறிய தீபிகா, மீண்டும் வாடகை அளிக்காமல் இருந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
மேலும், தன்னையும் தன் கணவரையும் அடியாட்கள் வீட்டிற்கு வந்து மிரட்டியதாக வீடியோவில் கூறிய தீபிகா, விசாரணையின்போது எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும், போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
வாடகைப் பிரச்னை இருந்தாலும், தீபிகா சுட்டிக் காட்டியது போல வீட்டில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தது யார் என்பது குறித்து போலீசார்தான் சொல்லவேண்டும் என்கிறார்கள் அந்த வீடியோக்களை பார்ப்பவர்கள்.
What's Your Reaction?