'மகாவிஷ்ணு கைது தவறு’ - வெளிப்படையாக பேசிய எல்.முருகன்!
மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், ''மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது தவறு. தமிழ்நாடு ஆன்மிக பூமி. இங்கு ஆன்மிகம் பேசியதற்காக கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது’’என்றார்.
What's Your Reaction?