கூண்டோடு நாடு கடத்தப்படும் மக்கள்.. டிரம்ப் மாஸ்டர் பிளான்.. இந்தியர்களின் நிலை?
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.
இதில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அவர் தனது அமைச்சரவையை நிர்வகிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் அளித்த வாக்குறுதியான சட்டப்பூர்வ குடியேற்றதை தடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 425,00 குற்றப்பதிவுகள் கொண்ட புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்தை தனது நிர்வாகம் செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாகவும், ராணுவத்தை நாடு கடத்தலுக்கு பயன்படுத்துவதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கு 300 பில்லியன் டாலர் முதல் 1 டிரில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் கூறியுள்ள சமூக ஆர்வலர்கள், நாடுகடத்தலின் மூலம் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சட்டப்பூர்வமாக குடியேறிவர்கள் முற்றிலும் பாதுகாக்கப்படுவார்கள் என்று நாட்டின் எல்லைகளுக்கு ‘THE BORDER CZAR’ ஆக நியமிக்கப்பட்டுள்ள டாம் ஹோமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தற்போது சட்டவிரோத குடியேற்றத்தை தவிர்க்க எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவலர்கள் தங்களது வேலைகளை மறந்து பயண முகவர்களாக (Travel Agent) செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு இலவச விமானங்கள் பயணங்கள், ஓட்டல்களை அமைத்து தருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தான் மக்கள் டொனால்ட் டிரம்பை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் டாம் ஹோமன் தெரிவித்துள்ளார்.
இந்த நாடு கடத்தல் மூலம் இந்தியர்கள் பலர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், டொனால்ட் டிரம்பின் இந்த செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்கா, அமெரிக்காவினருக்கே சொந்தம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?