அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதிய எச்.ராஜா..? பாஜக ஐடிவிங் சார்பில் மனு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அண்ணாமலை குறித்து எழுதியதாக பரவி வரும் கடிதம் போலியானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Jan 17, 2025 - 21:33
 0
அண்ணாமலைக்கு எதிராக கடிதம் எழுதிய எச்.ராஜா..? பாஜக ஐடிவிங் சார்பில் மனு
அண்ணாமலை-எச்.ராஜா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மூத்த தலைவர் எச்.‌ராஜா டெல்லி தலைமைக்கு எழுதிய போலியான கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் வலம் வந்த நிலையில் அக்கடிதம் பொய்யானது என்பது குறித்து பாஜக ஐடி விங் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஐடி விங் தலைவர் கார்த்திக் கோபிநாத் பேசியதாவது,  அரசியல் சூழல் மிக மோசமாக உள்ளது.  மூத்த தலைவர் எச்.ராஜா கையெழுத்தை போலவே எழுதி தயார் செய்து கடிதம்  வெளியிட்டுள்ளனர். மாநிலத்தலைவர் அண்ணாமலை அதிக இடங்களில் வசூல் செய்திருப்பதாக ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 10 வருடமாக ஒன்றரை கோடி தொண்டர்கள் என சொல்லிக்கொள்ளும் கட்சி அல்ல பாஜக. 

மாவட்டத் தலைவர்கள் தான் மாநில தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். கட்சிக்கும் மாநில தலைவருக்கும் பங்கம் விளைவிக்கும் வண்ணமாக இது உள்ளது. வினோதினி என்பவர்  சமுக வலைதளத்தில் தவறுதலான கடிதத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வினோதினி அதிமுக என்று உள்ளது. கனிமொழி 2 ஜி ஊழல் செய்துவிட்டார் என உதயநிதி ஸ்டாலினுடைய லெட்டர் பேடில் லெட்டர் எழுதி இருந்தால் விட்டு இருப்பீர்களா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, பாஜக தலைவர்களை பார்த்தால் ஏன் பயம். பாஜகவுடன் ஏன் நேரடியாக மோத முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  நேரடியாக சொல்ல வேண்டும் வினோதினி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏன் இன்னும் சொல்லவில்லை. எங்கள் தலைவர்களை இழிவாக பேசக்கூடிய தலைவர்களை நாங்கள் கேள்வி கேட்கிறோம். கட்சியைத் தாண்டி இதுபோல கலாசாரம் பரவக்கூடாது

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் உடனே மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்வேர்ட் செய்யப்பட்டவை உடனே அழிக்கப்பட வேண்டும். அதிமுகவும் இந்த செய்தியை பரப்புகிறது. காங்கிரஸினுடைய திவ்யா, காயத்ரி ரகுராம், தாமோதர பிரசாத் ஆகியோர் இந்த செய்தியை பரப்புகிறார்கள். ஜல்லிக்கட்டு, பொங்கல் தொகுப்பு, ஜல்லிக்கட்டு ஜாதி பாகுபாடு இருக்கிறது என்பது பற்றிய செய்திகளை திசை திருப்பதற்காக இது பதிவிடப்படுகிறது என அவர் கூ‌றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow