ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

Oct 10, 2024 - 14:59
Oct 10, 2024 - 15:03
 0
ரத்தன் டாடா மறைவு.. மகாராஷ்டிரா அரசு எடுத்த முடிவு..

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, 1937ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் டாடா குழும தலைவராக 1991 முதல் 2012 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது. டாடா குழுமம் ரூ. 1 லட்சம் காரை அறிமுகம் செய்து நடுத்தர மக்களின் கனவை நனவாக்கியவர் ரத்தன் டாடா. டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழிற்துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவராக அறியப்படுகிறார். 

 டாடா குழுமத்தின் முக்கிய சமயங்களில் போது தலைமை வகித்தது, டாடாவின் அடுத்த பாய்ச்சலுக்கு காரணமாக இருந்தது முதல் தற்போது இளம் தொழில் முனைவோரின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது என ரத்தன் டாடாவின் தொழில்துறை பயணம் சிறப்பு வாய்ந்தது.

ஒரு தொழிலதிபராக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் மதிப்பும், மரியாதையும் பெற்றவர் ரத்தன் டாடா என்று சொன்னால் மிகையாகாது. மேலும், பிசினஸ்ஸில் லாபம் பார்த்தது மட்டுமல்லாமல், இந்த பணத்தை பிறருக்கு உதவ பயன்படுதியவர் தான் டாடா. டாடா அறக்கட்டளை மருத்துவம், கல்வி, கலை உள்ளிட்ட விஷயங்களில் தொண்டு பணிகளை செய்து வருகிறது.

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்து, 2012ம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்றார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 86. பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்ற ரத்தன் டாடா, பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும், ஆளுமையாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரத்தன் டாடா உலகிற்கு சொன்ன அந்த 5 முக்கிய மந்திரங்கள்!

தொடர்ந்து அவரது உடல் மும்பை தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர். ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.ஒரு நாள் துக்க நாளான அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தகவல் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow