அமலாக்கத்துறையின் செயல் சட்டவிரோதமானது" - டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம்
"3 நாட்களும் தூக்கம் இன்றி நாங்கள் பாதிக்கப்பட்டோம்" அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் டாஸ்மாக் பிரமாணப் பத்திரம்.
அமலாக்கத்துறையின் செயல் சட்டவிரோதமானது மட்டுமின்றி மனிததன்மையற்றது என அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
பெண் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் தங்களை நள்ளிரவில் அமலாக்கத்துறை வீட்டுக்கு அனுப்பியது.
செல்போன்களையும் ED பறிமுதல் செய்ததால் குடும்பத்தினருக்கும் தகவல் சொல்ல முடியவில்லை என அமலாக்கத்துறை மீது டாஸ்மாக் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
What's Your Reaction?






