#BREAKING : Dengue Fever : கடலூரில் 9 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
Dengue Fever in Cuddalore : கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dengue Fever in Cuddalore : தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக வந்த 64 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் 7 பேரும், சிதம்பரத்தில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 64 பேர் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?






