#BREAKING : Gold Jewelry Theft Case : உடைந்திருந்த பூட்டு.. ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Gold Jewelry Theft in Thiruvallur : முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Gold Jewelry Theft in Thiruvallur : கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயலு, உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக நேற்று தனது குடும்பத்துடன் திருத்தணிக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் பற்றாக்குறையால் இரவு ரோந்து உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் நடைபெறாததால் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?