தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

Nov 26, 2024 - 10:16
 0
தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி..  விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்த 3 பேரை காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை தி.நகர் பகுதியை தொழிலதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த ஜூலை மாதம் ஆழ்வார் பேட்டையில் உள்ள இந்தோ - ரஷ்யன் பிசினஸ் அசோசியேட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அருண்ராஜ். இவர் தன்னை நேரில் சந்தித்து தான் இந்தோ - ரஷ்யன் பிசினஸ் அசோசியேட் பிரதிநிதி என்று அறிமுகம் படுத்திக்கொண்டார்.

இதையடுத்து ரஷ்யா அரசு, இந்திய திட்டங்களுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய முன் வந்துள்ளதாகவும், இதற்காக நீங்கள் திருச்சியில் நடத்தும் வியாபாரத் திட்டத்திற்கு 2000 கோடி வரை முதலீடு பெறலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். இதனை நம்பி தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடத்த அக்டோபர் மாதம் வரை அருண்ராஜ் நடத்திவரும் நிறுவன வங்கி கணக்குக்கு 7 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்தேன்.

பிறகு அவர்கள் தன்னிடம் முறையாக எதுவும் பேசாமல் தன்னை அலைக்கழித்து வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துகொண்டேன்.
மேலும் அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்து தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தொழிலதிபரை நூதன முறையில் நம்ப வைத்து மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மதன்குமார், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தர்மன், ரூபா, விக்னேஸ்வரன், டாஸ்மாக் தாசில்தார் விஸ்வநாதன், சசிகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மோசடி மன்னன் அருண்ராஜ், அவரது கூட்டாளிகள் மதன்குமார், ரூபா ஆகிய மூன்று பேரை மட்டும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.  

அருண் ராஜ் முதலீடு பெற்றுத்தருவதாக இதே போல மேலும் 5 பேரிடம் 2.5கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளதால், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவினரிடம், மத்திய குற்றப்பிரிவு 
போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண் ராஜை கூடிய விரைவில் கைது செய்து காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. ஏற்கனவே அருண் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹெராயின் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதி லிங்கம் என்பவர் உடன் தொடர்பில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

என்.ஐ.ஏ அதிகாரிகள் அருண் ராஜிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். ரூபாவின் ஓ.எம்.ஆர் வீட்டில் சோதனை நடத்தி மோசடி செய்ததற்கான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.  470 சவரன் தங்க நகைகள், 400கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் இருந்த 4 லட்சம் ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow