மரபணு குறைபாடு: குழந்தைக்காக ஒன்றிணைந்த தல – தளபதி ரசிகர்கள்…!
மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் மகளை காப்பாற்றத் துடிக்கும் பெற்றோரின் அவலநிலை, பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த சௌந்தர்யாவின் மகள் வருணிகா. ஆறு மாத குழந்தையான வருணிகா ஸ்ரீ மரபணு குறைபாடு நோயினால் பாதிக்கபட்டு கடந்த இரண்டு மாதங்களாக போராடி வருகிறார். இவரது சிகிச்சைக்கு 16 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறப்படும் நிலையில், அதற்கான முன்னெடுப்பை தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும் முன்னெடுத்துள்ளனர்.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், திருவொற்றியூரில் உள்ள திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படம் பார்க்க வரும் நபர்களிடம் இருந்து நிதி திரட்டும் பணியை அஜித் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். க்யூ ஆர் கோடு மற்றும் அக்கவுண்ட் டீடைல் பொருந்திய விவரங்களோடு ரசிகர்களுக்கு தியேட்டர் மூலம் அச்சடிக்கப்பட்டு இருந்த டிக்கெட் உடன் இணைக்கப்பட்டு டிக்கெட்டையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், வருணிகா ஸ்ரீக்கு என்ன என்பது குறித்தும், அதனை பொதுமக்களிடம் கொண்டு சென்ற அஜித் ரசிகர்களுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
குழந்தையின் தாய் சௌந்தர்யா, அரசு காப்பீடு திட்டத்தில் அரியவகை மரபணு நோயால் பாதிப்பின் சிகிச்சைகாண நடைமுறைகளை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய சௌந்தர்யா, அரசு காப்பீடு திட்டத்தில் அரியவகை மரபணு நோயால் பாதிப்பின் சிகிச்சைகான நடைமுறைகளை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததோடு, அஜித் குமார் ரசிகர்களும் தவெக கட்சி நிர்வாகிகளின் மூலம் இதுவரை 80 லட்சம் நிதி வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையின் சிகிச்சைக்காக அஜித் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து நிதி திரட்டி வருவதோடு, குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். விரைவிலேயே வருணிகா ஸ்ரீயின் சிகிச்சைக்காக தேவைப்படும் தொகை கிடைக்க வேண்டும் என்பது பலரது பிரார்த்தனையாக இருந்து வருகிறது.
What's Your Reaction?






